Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பு

By: Karunakaran Mon, 22 June 2020 09:57:57 AM

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மற்றும் கொரோனாவுக்கு அதிகம் பலியான மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 870 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus,maharashtra,corona death,india ,மகாராஷ்டிரா,கொரோனா உயிரிழப்பு,கொரோனா வைரஸ்,இந்தியா

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது வரை கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 1,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 101 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை டெல்லி, குஜராத் உயிரிழப்புக்களை விட குறைவு.

Tags :