Advertisement

நாளை மகாவீர் ஜெயந்தி: இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை

By: Nagaraj Mon, 03 Apr 2023 10:05:18 AM

நாளை மகாவீர் ஜெயந்தி: இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை

கோவை: மகாவீர் ஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி மதுபானக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவீர் ஜெயந்தியை ஒட்டி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், இதனை அடுத்து ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

meat shops,coimbatore ,இறைச்சி கடைகள்,கோவை, கடுமை, நடவடிக்கை

தொடர்ந்து, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அதன்படி கோவை மாநகராட்சியில் நாளை இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

விதிகளை மீறி கடைகள் செயல்பட்டால் அந்தக்கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Tags :