Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணி .. சென்னை-குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி .. சென்னை-குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

By: vaithegi Fri, 13 Oct 2023 3:10:49 PM

பராமரிப்பு பணி .. சென்னை-குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்


சென்னை : சென்னை - குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம் ..சென்னை - குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு வருகிற அக்.15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில்(16127) எர்ணாகுளம்-குருவாயூர் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

இதனை அடுத்து சென்னை சென்ட்ரல்-பாலக்காடுக்கு இன்று முதல் (அக்.13) 29-ம் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரயில் (22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

express train service,chennai,kurvayur ,விரைவு ரயில் சேவை,சென்னை,குருவாயூர்

பாலக்காடு-சென்னை சென்ட்ரலுக்கு இன்று (அக்.13) முதல் அக்.30-ம் தேதி வரை புறப்படவேண்டிய விரைவு ரயில்(22652),

பாலக்காடு சந்திப்பு-பாலக்காடு டவுன் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :