Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்...ரயில் ரத்து குறித்து அறிவிப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்...ரயில் ரத்து குறித்து அறிவிப்பு

By: Nagaraj Thu, 02 Feb 2023 7:36:05 PM

சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்...ரயில் ரத்து குறித்து அறிவிப்பு

சென்னை: நாளை 3ம் தேதி முதல் சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் கோவை – சேலம் இடையே இயக்கப்படும் ரயில் (06802) ரத்து செய்யும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயில் சேவையை நாடுகின்றனர். இந்நேரத்தில் மக்களுக்கு இடையூறு இன்றி சிறந்த முறையில் சேவையை வழங்கும் நோக்கில் ரயில்வே துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் அவ்வப்போது ரயில்கள் மற்றும் அவை செல்லக்கூடிய வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

trains,maintenance work ,ரயில்கள் ,பராமரிப்பு பணி, மாலை, ரத்து செய்யப்படுகிறது, கரூர்

எனவே அதன்படி பிப். 3ம் தேதி முதல் சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே அதன் காரணமாக கோவை – சேலம் இடையே இயக்கப்படும் ரயில் (06802) பிப் 3, 4, 6,10,11,13,17,18, 20, 24, 25, 27 போன்ற தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளது.

இதற்கு அடுத்ததாக கரூர் – திருச்சி இடையே பிற்பகல் 3.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் (06882) பிப்ரவரி 14, 21, 28 போன்ற 3 நாட்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளது.அதை தொடர்ந்து விருத்தாசலம் – சேலம் இடையே காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் (06121) பிப். 14, 21, 28 -ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இதனையடுத்து பாலக்காடு – திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் (16844) பிப்ரவரி 14, 21, 28 -ம் தேதி கரூருடன் நிறுத்தப்படும். இதற்கு அடுத்தாக திருச்சி – ஈரோடு இடையே இயக்கப்படும் ரயிலானது (06809) பிப்ரவரி 14, 21, 28 தேதிகளில் கரூரிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags :
|