Advertisement

பராமரிப்பு பணி ... மதுரை ரயில் புறப்படும் நேரம் மாற்றம்.

By: vaithegi Sat, 31 Dec 2022 7:39:36 PM

பராமரிப்பு பணி    ...   மதுரை ரயில் புறப்படும் நேரம் மாற்றம்.

சென்னை: தமிழகத்தில் தென்னக ரயில்வே சார்பில் ரயில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. மேலும் அத்துடன் ரயில் செல்ல கூடிய தண்டவாளங்களில் இத்தகைய பணிகள் ரயில்வே ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று கோவை, கரூர் வழியாக இயக்கப்படும் ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நேரம் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நாளை பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

madurai,maintenance work ,மதுரை ,பராமரிப்பு பணி

இதனையடுத்து பாம்பன் பாலத்தில் செல்ல கூடிய மதுரை பரமக்குடி – சத்திரக்குடி இடையே இயக்கப்படும் ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி மதுரை ரயில் கோட்டம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி அதில் மதுரை பரமக்குடி – சத்திரக்குடி இடையே ரயில் ஜன. 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மதுரை ரயில் (06654) ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு செல்லும். அதே போல ராமநாதபுரத்திலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :