Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்.. ஜிஎஸ்டி..பொதுமக்கள் தெரிந்து கொள்ளுங்கள்..

வரும் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்.. ஜிஎஸ்டி..பொதுமக்கள் தெரிந்து கொள்ளுங்கள்..

By: Monisha Sat, 16 July 2022 6:02:18 PM

வரும் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்.. ஜிஎஸ்டி..பொதுமக்கள்  தெரிந்து கொள்ளுங்கள்..

தமிழ்நாடு: ஜிஎஸ்டி தொடர்பாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல், சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பல பொருட்கள் , சேவைகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை திருத்தியமைக்க அரசு முடிவு செய்திருந்தது. இதன் காரணமாகவே , புதிய ஜிஎஸ்டி வரி ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் விளைவாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஜூலை 18ம் தேதி முதல் அதிகரிக்கும் எனவும், மேலும் வேறு சில பொருட்களின் விலைகள் குறைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. லீகல் மெட்ராலஜி சட்டத்தின்படி முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிளிடப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர், பால் போன்ற சில்லறை பொருட்களுக்கு ஜூலை 18 முதல் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இந்த பொருட்கள் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே பேக்கிங் செய்யப்பட்டதால் இதற்கு ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கு உண்டு.காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் கவுன்சில் தெரிவித்துள்ளது.

gst,tax,price,increase ,ஜிஎஸ்டி,விலை,பொருட்கள்,கட்டணம்,

மருத்துவமனையில் அறை வாடகை (ICU தவிர்த்து) ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000க்கு மேல் ITC இல்லாத அறைக்கு வசூலிக்கப்படும் தொகைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் LED விளக்குகள், LED விளக்குகள் சாதனங்கள் விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கத்திரிக்கோல் போன்ற தையல் சார்ந்த பொருட்கள் மற்றும் பென்சில், ஷார்பனர்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், பிளேடுகள், ஸ்பூன்கள், ஃபோர்க்ஸ் போன்ற சில்வர் பொருட்கள், லேடில்ஸ் ஸ்கிம்மர்கள், கேக்- போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.

எலும்பு முறிவு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் , உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடுகளை ஈடுசெய்ய உடலில் பொருத்தப்படும் பிற உபகரணங்கள், கண்விழி லென்ஸ் இவற்றின்ஜிஎஸ்டி விகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறையும் எனவும் இந்த கவுன்சில் தெரிவிக்கிறது.

கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் மற்றும் குதிரைப் பந்தயம் குறித்து அமைச்சர்கள் குழு, இந்த நடவடிக்கைகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் வகையில் பணியை மேற்கொண்டது,இப்படியாக ஜிஎஸ்டியின் வரி விதிப்பில் மாற்றங்கள் வரவுள்ளதாகஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|