Advertisement

காங்கிரஸ் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க அழைப்பு

By: Monisha Tue, 14 June 2022 4:39:11 PM

காங்கிரஸ் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க அழைப்பு

டெல்லி : ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் தற்போது பாஜக களமிறங்கி யுள்ளது. இதுகுறித்து கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக ஏற்கும் வகையில் தங்களுடன் ஒத்த கொள்கை கொண்டவரை ஜனாதிபதியாக்க நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி இன்னும் முழுமையாக தயாராகவில்லை. இதுகுறித்து டெல்லியில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.

mamata banerjee,invite,congress,meeting,presidential election ,மம்தா பானர்ஜி, அழைப்பு, காங்கிரஸ், கூட்டம், ஜனாதிபதி தேர்தல்

தற்போது மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளைச் சேர்ந்த 22 தலைவர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்தார். இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி, தி.மு.க. உள்பட 22 தலைவர்கள் அடங்குவர்.

சோனியா காந்தி அனுப்பிய கடிதத்தில் ஜூன் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். நாளை நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தங்கள் கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|