- வீடு›
- செய்திகள்›
- பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள் ... மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள் ... மம்தா பானர்ஜி
By: vaithegi Thu, 29 Dec 2022 10:36:25 AM
இந்தியா: பிரதமரின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் ..... பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
இதனை அடுத்து பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இது தொடர்பாக மம்தா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள், அவர் விரைவில் குணமடையட்டும்" என அவர் பதிவிட்டுள்ளார்.