சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
By: Nagaraj Sat, 31 Oct 2020 7:10:56 PM
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது... கனடாவில் 2001ல் இருந்து 2009 வரை சிறுமி ஒருவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த நபரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.
Pooran "Bruce" Sancharra என்ற நபருக்கு தற்போது 64 வயதாகிறது. இவர் கடந்த 2001ல் இருந்து 2009 வரையில் சிறுமி ஒருவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் என ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். Bayview மற்றும் Sheppard அவென்யூ பகுதியில் சில பாலியல் ரீதியான தாக்குதல்களை Sancharra சிறுமி மீது நிகழ்த்தியுள்ளார்.
அதன்படி 8 வயதில் இருந்து 16 வயது வரை சிறுமிக்கு பாலியல் கொடுமை
நடந்துள்ளது. அப்போது Sancharraவின் வயது 44ல் இருந்து 52 வரை
இருந்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக கடந்த வியாழன் அன்று Sancharra-வை
பொலிசார் கைது செய்தனர்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Sancharraவால் மேலும் சிலர்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அது தொடர்பிலான தகவல்
தெரிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.