Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பவர்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பவர்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு

By: Nagaraj Mon, 31 July 2023 8:12:42 PM

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பவர்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு

கோவை: அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பவர்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு என்று அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சரை வரவேற்பதற்கு திருக்குறளை எழுதிய பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது

அதில், தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்ற குரலை தவறாக எழுதி இருந்ததை அமைச்சர் சி.வி.கணேசன் சுட்டிக் காட்டினர். தொடர்ந்து ஆய்வு செய்த அமைச்சர் உள்ளே இருந்த பழைய மின்விளக்குகள், நாற்காலிகளை மாற்றச் சொல்லி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

minister of information,development,employment,government,chief minister ,அமைச்சர் தகவல், உருவாக்கப்படும், வேலைவாய்ப்பு, அரசு, முதல்வர்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள 102 தொழிற்பயிற்சி மையங்களில் 72 நவீன தொழில்நுட்ப மையத்தை இளைஞர்களுக்காக உருவாக்கி கொடுத்துள்ளார். உலகத் தர வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்பை இதன் மூலம் உருவாக்கி உள்ளது.

நான் முதல்வர் பற்றி மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் என்ன படிக்கலாம், எப்படிப்பட்ட பயிற்சி படிக்கலாம்,படித்து முடித்த பின் எந்த நிறுவனத்தில் வேலை செய்வது,குறித்து வடிவமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு கட்டாயம் வேலைவாய்ப்பு உருவாக்குவது அரசு குறிக்கோளாக உள்ளது.

102 ஐடிஐகளில் 95 சதவீத அளவிலான மாணவர் சேர்க்கை இந்த வருடம் எதிர்பார்க்கிறோம். அரசு கலை கல்லூரி பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்பயிற்சி மூலம் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.தாழ்வு மனப்பான்மையை நீக்கி ஐடிஐ படிக்கக்கூடிய அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்பதே முதலமைச்சர் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :