Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் உள்நாட்டு விமானங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவு

பாகிஸ்தானில் உள்நாட்டு விமானங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவு

By: vaithegi Mon, 27 June 2022 12:16:54 PM

பாகிஸ்தானில் உள்நாட்டு விமானங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவு

பாகிஸ்தான்: கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா மீண்டும் உயிர் பயத்தை காட்டி வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து மீண்டும் 2வது நாளாக 400 ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 94 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

face shield,domestic flights ,முக கவசம்,உள்நாட்டு விமானங்கள்

இந்நிலையில், பாகிஸ்தான் உள்நாட்டு விமானங்களில் பயணிப்போர் மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒரு ரோலர் கோஸ்டர் போல் செயல்படுவதாக, பாகிஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜாவேத் அக்ரம் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், தடுப்பூசிகள் இப்போது செயல்திறனை இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பதக்கது.

Tags :