Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணிக் சர்க்காருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் போட்டியிட வாய்ப்பு இல்லை

மாணிக் சர்க்காருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் போட்டியிட வாய்ப்பு இல்லை

By: Nagaraj Fri, 27 Jan 2023 11:03:40 AM

மாணிக் சர்க்காருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் போட்டியிட வாய்ப்பு  இல்லை

திரிபுரா: திரிபுராவில் 74 வயதான மாணிக் சர்க்காருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்கு பதிலாக அவர் மாநிலம் முழுவதும் இடதுசாரி பிரச்சாரத்தை முன்னெடுப்பார் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும். அந்த வகையில் 2018 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தது.

1993 முதல் 2018 வரை, தசரத் தெபர்மா (25 ஆண்டுகள்), மாணிக் சர்க்கார் (20 ஆண்டுகள்) ஆகிய இரு கம்யூனிஸ்ட் முதல்வர்கள் பதவியில் இருந்துள்ளனர். இந்நிலையில், வடகிழக்கில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என்ற பிம்பத்தை கடந்த தேர்தல் உடைத்தது. நான்கு வருட தீவிர களப்பணி பா.ஜ.க.வுக்கு பலன் அளித்துள்ளது. கடந்த 2013 திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வெறும் 0.05 சதவீத வாக்குகள்தான் கிடைத்தன.

manik sarkar,marxist communist party,tripura, ,கட்சி, திரிபுரா, மாணிக் சர்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அதாவது, 2018ல் பாஜக மட்டுமே 36 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. 43.59 சதவீத வாக்குகள். 5 ஆண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆட்சி செய்து வரும் பாஜக பிப்ரவரி 16ம் தேதி சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. இந்தியாவில் அதிக முறை மாநில முதல்வராக இருந்தவர்களின் திரிபுராவின் மாணிக் சர்க்கார் இடம் பிடித்துள்ளார். 19 ஆண்டுகள் 363 நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மிக எளிமையான வாழ்க்கை முறையை கொண்டவர்.

தனது சம்பளத்தையும் கட்சி நிதிக்காக அர்ப்பணித்தார். எதையும் தனக்குச் சொந்தமாக வைத்துக் கொள்ளாதவர். அவருக்கு முன் தசரத் தெபர்மா 4 ஆண்டுகள் 335 நாட்கள் முதல்வராக இருந்தார். இதன் விளைவாக திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனர். குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுராவில் மொத்தம் 35 ஆண்டுகள் கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்தனர்.

இந்நிலையில், பல முறை முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் வரும் திரிபுரா சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணிக் சர்க்கார் போட்டியிடாததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 74 வயதான மாணிக் சர்க்கார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்கு பதிலாக அவர் மாநிலம் முழுவதும் இடதுசாரி பிரச்சாரத்தை முன்னெடுப்பார் என்றும் அக்கட்சி அறிவித்தது.

Tags :