Advertisement

மணிலா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி

By: Nagaraj Thu, 08 June 2023 4:44:15 PM

மணிலா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடந்தது.

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா கடற்கரையை நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து தூய்மைப்படுத்தினர்.

garbage,collection,manila,beach,cleanup,polluted river ,குப்பைகள், சேகரிப்பு, மணிலா, கடற்கரை, தூய்மைப்பணிகள், மாசுப்பட்ட நதி

பிலிப்பைன்ஸில் உள்ள லாகுனா வளைகுடாவை, மணிலா கடலோர பகுதிகளுடன் இணைக்கும் பாசிக் நதி, உலகிலேயே மிகவும் மாசுபட்ட நதிகளில் ஒன்றாகும்.

அங்கு இன்று தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், இரண்டே மணி நேரத்தில் 200 சாக்கு பைகள் அளவிற்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|
|