Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற அழைப்பு

மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற அழைப்பு

By: Nagaraj Sun, 23 July 2023 11:22:51 PM

மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற அழைப்பு

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு... மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் பயிற்சிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

arrangements,manipur,state,chief minister,invitation,athletes ,ஏற்பாடுகள், மணிப்பூர், மாநிலம், முதல்வர், அழைப்பு, விளையாட்டு வீரர்கள்

அம்மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதாகவும் முதலமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.

இதனால், அம்மாநில வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியதாகவும், உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags :
|