Advertisement

இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து தெரிவிக்கின்றனர்..

By: Monisha Fri, 08 July 2022 8:54:11 PM

இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து தெரிவிக்கின்றனர்..

தமிழ்நாடு: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது, நம் தமிழகத்திற்கு கிடைத்துள்ள பெரும் சிறப்பாகும் என்று வாழ்த்தினர். ராஜ்ய சபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற ராஜ்யசபாஎம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தமிழ் சினிமாவை சார்ந்த இளையராஜா ராஜயசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ilayaraja,mp,music composer,proud ,நாடாளுமன்றம், ராஜ்யசபா,உறுப்பினர்,
இசையமைப்பாளர்,

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம்.

அதன் அடிப்படையில் தற்போது இன்றுவரை 1000-க்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு இசையமைத்துள்ள பெருமைக்குரிய இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் வாழ்த்தினர்.

Tags :
|