Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகா மாநிலத்தில் பல ஆறுகள் நிரம்பி வழிவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா மாநிலத்தில் பல ஆறுகள் நிரம்பி வழிவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

By: vaithegi Sat, 09 July 2022 12:54:37 PM

கர்நாடகா மாநிலத்தில் பல ஆறுகள் நிரம்பி வழிவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா : கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் மல்நாடு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் முடக்கப்பட்டுள்ளது. இது தவிர கர்நாடகாவின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் பெய்த கனமழை காரணமாக ஒரு சில வட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதி மற்றும் அதன் துணை நதிகளில் இருந்து நீர் வெளியேற்றம் உயர்ந்துள்ளது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் கர்நாடகாவின் ஆல்மட்டி நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து 75,200 கன அடியை தாண்டியிருப்பதால், கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

warning,karnataka ,எச்சரிக்கை,கர்நாடகா

அதனால் பாகல்கோட் மற்றும் பெலகாவி மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் சில பாலம், தடுப்பணைகள் ஆகியவை ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடலோர மற்றும் மல்நாடு மாவட்டங்களான குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா போன்ற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல உயிர்கள் மற்றும் உடைமைகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :