Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக தலைவர்கள் பலரும் இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பு

உலக தலைவர்கள் பலரும் இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Tue, 15 Aug 2023 4:03:35 PM

உலக தலைவர்கள் பலரும் இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பு


இந்தியா: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து ... நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்திய நிலையில் , செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன் பின் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிய நிலையில், தேசிய கீதம் இசைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி 140 கோடி இளைஞர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன் என்று கூறினார். இதேபோன்று தலைவர்கள் பலரும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்களும் இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

world leaders,russian president vladimir putin,french president emmanuel macron ,உலக தலைவர்கள் ,ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்


அதைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில், உங்கள் நாடு பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூகம் மற்றும் பிற துறைகளில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்று உள்ளது. இந்தியா உலக அரங்கிலும், நாடெங்கிலும் நன்கு மரியாதையை சம்பாதித்துள்ளது. சர்வதேச விவகாரங்களில் முக்கியமான ஆக்கபூர்வமான பங்கு வகிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்! ஒரு மாதத்திற்கு முன்பு பாரிஸில், நானும் எனது நண்பர் நரேந்திர மோடியும், இந்தியாவின் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவான 2047-ஆம் ஆண்டிற்கு புதிய இந்திய-பிரெஞ்சு லட்சியங்களை அமைத்தோம். இந்தியா எப்போதும் பிரான்சை நம்பகமான நண்பனாகவும், கூட்டாளியாகவும் நம்பலாம் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :