Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை இணைக்கும் வரை மராட்டியம் முழுமை பெறாது - உத்தவ் தாக்கரே

மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை இணைக்கும் வரை மராட்டியம் முழுமை பெறாது - உத்தவ் தாக்கரே

By: Karunakaran Sat, 15 Aug 2020 2:14:43 PM

மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை இணைக்கும் வரை மராட்டியம் முழுமை பெறாது - உத்தவ் தாக்கரே

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயால் தொடங்கப்பட்ட ‘மார்மிக்' வார இதழின் 60-வது ஆண்டு விழா மும்பையில் நடைபெற்றபோது, அதில் மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மும்பையில் மராத்தி பேசும் மக்களின் உரிமைகளுக்காக போராட சிவசேனா தொடங்கப்பட்டதற்கு காரணமே இந்த இதழ் தான் என்று தெரிவித்தார்.

இந்த இதழ் விரைவில் டிஜிட்டல் வடிவிலும் வெளியிடப்படும் எனவும், ஓவிய கலைஞரான எனது தந்தைக்கு பிரஷ் தான் ஆயுதம். அவர் மராத்தி பேசும் மக்களின் பிரச்சினைகளையும், புலம்பெயர்ந்தவர்களால் மண்ணின் மைந்தர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அவரது கேலி சித்திரங்கள் மூலம் அம்பலப்படுத்தியதாக உத்தவ் தாக்கரே கூறினார்.

maharastra,marathi-speaking people,uddhav thackeray,karnataka ,மகாராஷ்டிரா, மராத்தி பேசும் மக்கள், உத்தவ் தாக்கரே, கர்நாடகா

உத்தவ் தாக்கரே பேசுகையில், எனது அரசு மண்ணின் மைந்தர்களுக்கு இடஒதுக்கீட்டையும், பாடத்திட்டத்தில் மராத்தியையும் கட்டாயமாக்கியது. மார்மிக் சிவசேனாவை உருவாக்கியது. இப்போது அந்த கட்சியில் இருந்து முதல்-மந்திரி உங்களுக்கு கிடைத்து இருக்கிறார். கா்நாடகாவில் மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை இணைக்கும் வரையில் ஒன்றுபட்ட மராட்டியம் முழுமை பெறாது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், பால்தாக்கரே, ஆா்.கே. லெட்சுமணுக்கு பிறகு அரசியல் நடப்புகளை கூறும் கேலி சித்திரங்கள் குறைந்துவிட்டன. செய்தி பிரிவால் கூற முடியாத கருத்துகளையும் அவர்களின் கேலி சித்திரம் விளக்கிவிடும் என்று கூறினார்.

Tags :