Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது மார்க் 3 ராக்கெட்

36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது மார்க் 3 ராக்கெட்

By: Nagaraj Sun, 26 Mar 2023 6:27:43 PM

36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது மார்க் 3 ராக்கெட்

புதுடில்லி: 36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது LVM-III - M-3 ராக்கெட். சுமார் 5,805 கிலோ எடைகொண்ட 36 செயற்கை கோள்களை சுமந்து செல்கிறது மார்க் – 3.

பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் 36 செயற்கைகோள்களை நிலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயற்கைகோளும் சுமார் 150 கிலோ எடை கொண்டது. திட, திரவ எரிபொருள்களில் இயங்கும் மார்க் - 3 ராக்கெட், 640 டன் எடை, 43.5 மீட்டர் உயரம் கொண்டது.

satellite,broadband,internet service,seamless,to sky ,செயற்கை கோள், பிராட்பேண்ட், இணைய சேவை, தடையில்லாமல், விண்ணிற்கு

பூமிக்கு மேலே சுமார் 450 கி.மீ தூரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன இந்த செயற்கைகோள்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்வெப் நிறுவன செயற்கைகோள்கள் சுமார் 1,200 கிலோமீட்டர் உயரத்தில் செயல்பட்டு வருகின்றன. பிராட்பேண்ட் இணைய சேவையை தடையில்லாமல் வழங்க ஒன்வெப் செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. 2022 அக்.23-ம் தேதி, ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை இஸ்ரோ நிலைநிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :