Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் 'மேரி சஹேலி' திட்டம்

பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் 'மேரி சஹேலி' திட்டம்

By: Nagaraj Fri, 30 Oct 2020 7:44:19 PM

பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் 'மேரி சஹேலி' திட்டம்

மேரி சஹேலி திட்டம்... ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ள 'மேரி சஹேலி' திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையின் முயற்சி காரணமாக உருவாக்கப்பட்டுள்ள 'மேரி சஹேலி' எனப்படும் எனது தோழி திட்டத்தின் மூலம் ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது.

women,security,travel,reception,service ,பெண்கள், பாதுகாப்பு, பயணம், வரவேற்பு, சேவை

இந்த திட்டத்தின் மூலம் தனியாக ரயிலில் செல்லும் பெண்கள் ரயில்வே காவல்துறையிடம் தகவல் தெரிவித்து விட்டால் அவர்கள் பாதுகாப்பை ரயில்வே காவல் உறுதி செய்யும். ஒவ்வொரு முக்கிய ஸ்டேசன்களிலும் ரயில் நிற்கும்போது தகவல் தெரிவித்த பெண்ணின் இருக்கை எண்ணிற்கு வந்து காவலர்கள் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வர்.

தேவையான உதவிகளை பயணிக்கும் பெண் போன் மூலமாகவும் கேட்கலாம். பெண் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவரிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கருத்துகளை பெற்று மேம்பாடு செய்து கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சேவை மூலம் பெண்கள் பாதுகாப்பாக தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பதால் பலரும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|