Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புகழை தேடிதந்தவர்கள் மீது இழைக்கப்படும் பாரிய அவதூறு; மங்கள சமரவீர கண்டனம்

புகழை தேடிதந்தவர்கள் மீது இழைக்கப்படும் பாரிய அவதூறு; மங்கள சமரவீர கண்டனம்

By: Nagaraj Fri, 19 June 2020 3:47:24 PM

புகழை தேடிதந்தவர்கள் மீது இழைக்கப்படும் பாரிய அவதூறு; மங்கள சமரவீர கண்டனம்

நாட்டிற்குப் புகழைத் தேடித்தந்த குமார் சங்கக்கார மற்றும் அவரது அணியின் மீது இழைக்கப்படும் பாரிய அவதூறாகவே இதனைப் பார்க்கமுடியும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2011 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதை வெளிப்படுத்துவதற்கு முன்னாள் அமைச்சர் 9 வருடங்கள் காத்திருந்தமைக்கான காரணமென்ன என்று கேள்வி எழுப்பியிருக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாட்டிற்குப் புகழைத் தேடித்தந்த குமார் சங்கக்கார மற்றும் அவரது அணியின் மீது இழைக்கப்படும் பாரிய அவதூறாகவே இதனைப் பார்க்கமுடியும் என்றும் விசனம் வெளியிட்டிருக்கிறார்.

slander,cricket team,former minister,condemnation ,அவதூறு, கிரிக்கெட் அணியினர், முன்னாள் அமைச்சர், கண்டனம்

2011 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டது என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வெளியிட்ட கருத்தையடுத்து பெரும் சர்ச்சையொன்று கிளம்பியிருக்கும் நிலையில், எவ்வித ஆதாரங்களுமின்றி அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்குக் கண்டனங்களும் வலுத்துவருகின்றன.

தற்போது இக்குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்ற முன்னாள் அமைச்சர் அதற்கான 9 வருடங்கள் காத்திருந்தமைக்கான காரணம் என்னவென்று கேள்வி எழுப்பியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, 2011 ஆம் ஆண்டில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவரால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆட்டநிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டு எமது நாட்டிற்கு புகழையும், மகிமையையும் பெற்றுத்தந்த குமார் சங்கக்காரவினதும் அவரது அணியினரதும் நேர்மையின் மீது ஏற்படுத்தப்படும் மிகமோசமான அவதூறாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Tags :