Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திரமான விசாரணையை நடத்தலாம்; கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

சுதந்திரமான விசாரணையை நடத்தலாம்; கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

By: Nagaraj Wed, 20 May 2020 10:37:14 AM

சுதந்திரமான விசாரணையை நடத்தலாம்; கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

கொரோனா விவகாரத்தில் பாகுபாடின்றி சுதந்திரமான விசாரணையை நடத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டு உலக நாடுகளுக்கு பரவ செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் போன்ற ஆரம்பகட்ட பல தகவல்களை சீனா மறைத்ததாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் எப்படி உருவானது மற்றும் எவ்வாறு பரவியது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானம் கொண்டுவந்தன.

corona,origin,localization,health care system,consent,investigation ,கொரோனா, தோற்றம், பரவல், சுகாதார அமைப்பு, ஒப்புதல், விசாரணை

வீடியோ கான்பிரஸ் மூலம் உலக சுகாதார அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கொண்டுவந்த இந்த தீர்மானத்திற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 120 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பாக விரிவான, சுதந்திரமான விசாரணை போதிய ஆதரவு கிடைத்துள்ளது.

வைரஸ் தொடர்பான விசாரணைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த சீனா பின்னர் உலக நாடுகள் கொடுத்த கடுமையான அழுத்தத்துக்கு பணிந்து ஒப்புக்கொண்டுள்ளது. பல்வேறு நாடுகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த பின் கூட்டத்தின் இறுதியில் பேசிய பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கொரோனா வைரசின் தோற்றம், பரவல் குறித்து பாரபட்சமற்ற ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டார்.

Tags :
|
|