Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனது கட்சியை சேர்ந்த 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்த மாயாவதி

தனது கட்சியை சேர்ந்த 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்த மாயாவதி

By: Karunakaran Fri, 30 Oct 2020 2:52:14 PM

தனது கட்சியை சேர்ந்த 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்த மாயாவதி

உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள 10 நாடாளுமன்ற மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தனர். இதனால் அவர்கள், மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.

அதன்பின், அவர்களில் 4 எம்.எல்.ஏ.க்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் ராம்ஜி கவுதமின் வேட்புமனுவில் உள்ள தங்கள் கையெழுத்து, போலியானது என்று தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். ஆனாலும், ராம்ஜி கவுதமின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது, அவர்கள் உள்பட 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று இடைநீக்கம் செய்தார்.

mayawati,7 disgruntled mla,party,suspend ,மாயாவதி, 7 அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ, கட்சி, சஸ்பெண்ட்

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், இந்த எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் வேறு கட்சியில் சேர்ந்தால், அவர்களுக்கு எதிராக கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். அத்துடன், சமாஜ்வாடி கட்சிக்கு எதிராகவும் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த மாநிலங்களவை தேர்தலில், சமாஜ்வாடி கட்சியின் 2-வது வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய எந்த கட்சி வேட்பாளருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். மேலும், வருங்காலத்தில் நடக்கும் சட்ட மேலவை, மாநிலங்களவை உள்பட எந்த தேர்தலாக இருந்தாலும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை வீழ்த்த பா.ஜனதா உள்பட எந்த கட்சிக்கும் வாக்களிப்போம் என மாயாவதி கூறியுள்ளார்.

Tags :
|