Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்க மாயாவதி வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்க மாயாவதி வலியுறுத்தல்

By: Nagaraj Sat, 18 July 2020 10:17:15 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்க மாயாவதி வலியுறுத்தல்

ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்க வலியுறுத்தல்... ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி ஆட்சியை கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பரிந்துரைக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டை மாற்றக்கோரி 18 அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பிரிந்து சென்றுள்ளார். இதனால் அசோக் கெலாட் பெரும்பான்மை எண்ணை நிரூபிக்க சுயேட்சைகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரை தனக்கு ஆதரவாக மாற்றியுள்ளார்.

mayawati,rajasthan,presidential rule,insistence,democracy ,
மாயாவதி, ராஜஸ்தான், ஜனாதிபதி ஆட்சி, வலியுறுத்தல், ஜனநாயகம்

பி.எஸ்.பி.,க்கு ஆறு உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களை மொத்தமாக காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.இதனால் அசோக் கெலாட் மீது கடும் கோபத்தில் உள்ள மாயாவதி, ராஜஸ்தானில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டை மற்றும் உறுதியற்ற தன்மையை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைக்குமாறு கவர்னரை வலியுறுத்தியுள்ளார்.

அப்போது தான் மாநிலத்தில் ஜனநாயகம் மோசமடையாமல் இருக்கும் என்றார். மேலும், அசோக் கெலாட் வெளிப்படையாக கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறி, இரண்டாவது முறையாக பி.எஸ்.பி.,யை ஏமாற்றியுள்ளார். தொலைபேசி ஒட்டுக்கேட்பு போன்ற சட்டவிரோத காரியங்களையும் அவர் செய்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.

Tags :