Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மயிலாடுதுறை கோயில் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

மயிலாடுதுறை கோயில் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

By: Nagaraj Sun, 07 May 2023 12:30:59 PM

மயிலாடுதுறை கோயில் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

புதுடில்லி: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு... மயிலாடுதுறை வட்டம், கொற்கையில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் இருந்த வீணாதர தட்சிணாமூர்த்தி, அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மியூசியத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலையை மீட்டு, இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிலை திருட்டு தடுப்பு குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

சிலைத்தடுப்புப் பிரிவின் கூடுதல் இயக்குநரான சைலேஷ் குமார் யாதவ், இதற்கென தனி குழுவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள கொற்கையைச் சேர்ந்த சிலை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிலைத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். அங்கிருந்த உலோகத்தால் செய்யப்பட்ட சிலைகளை குழுவினர் ஆய்வு செய்தார்கள். புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சு இன்ஸ்டியூட்டை சேர்ந்தவர்களால் 1959 ஆண்டில் இதே கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது வீணாதார தட்சிணாமூர்த்தி சிலை காணாமல் போயிருப்பது தெரிந்தது.

சிலை கடத்தப்பட்டது எப்போது என்பது தெரியவில்லை. ஆனால், வீணாதார தட்சிணாமூர்த்தியின் சிலைக்கு பதிலாக அது போன்று ஒரு போலி சிலையான கல்யாண சுந்தரேஸ்வரர் சிலை கோயிலில் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

abroad,idols,india,investigations,prosecution,idol smuggling ,வெளிநாடு, சிலைகள், இந்தியா, விசாரணைகள், வழக்கு, சிலைக்கடத்தல்

இது குறித்து தொடர்ந்து நடந்த விசாரணையில் வீணாதார தட்சிணாமூர்த்தி சிற்பம் அங்கிருந்து திருடப்பட்டிருப்பதும் பின்னர் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இந்தியாவில் உள்ள மியூசியங்கள், கலை ஆர்வலர்களிடம் உள்ள உலோக சிலையோடு ஒப்பிட்டு பார்த்ததில் அமெரிக்காவில் உள்ள கிளீவ் லேண்ட் மியூசியத்தில் இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு வழக்கை பதிவு செய்துள்ள சிலைத் தடுப்பு காவல்துறையினர் அமெரிக்க மியூசியத்தை தொடர்பு கொண்டிருப்பதாகவும் இரு நாட்டிற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருடப்பட்ட சிலையை மீட்கும் முயற்சிகள் ஆரம்பமாகியிருக்கின்றன

சிலைக்கடத்தல் என்பது பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 60, 70களில் அதிகரித்து சிலைத்திருட்டு சம்பவங்கள், காலப்போக்கில் மக்கள் மறந்து போகுமளவுக்கு மாறிவிட்டன. இந்நிலையில் 2016 காலத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்டட அதிரடி நடவடிக்கைகளினால் சிலைத்திருட்டு விவகாரம் மறுபடியும் சூடுபிடித்தது. தற்போது சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளில் விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதால் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட பல சிலைகள் இந்தியாவுக்கு திரும்பி வர ஆரம்பித்திருக்கின்றன.

Tags :
|
|
|