Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் 3-ம் சுற்று கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் 3-ம் சுற்று கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது

By: vaithegi Thu, 14 Sept 2023 12:38:35 PM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் 3-ம் சுற்று கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது

சென்னை: கலந்தாய்வு முடிவுகள் செப். 16-ம் தேதி வெளியீடு ...அரசு ஒதுக்கீட்டில் காலியாகயிருந்த 56 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 216 எம்பிபிஎஸ்,
399 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான 3-ம் சுற்று கலந்தாய்வு கடந்த செப். 11-ல் ஆன்லைனில் தொடங்கியது. இன்றுடன் கலந்தாய்வு நிறைவடைகிறது.

இதனை அடுத்து வருகிற செப். 16-ம் தேதி www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களில், இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

consultancy,mbbs,bds ,கலந்தாய்வு ,எம்பிபிஎஸ், பிடிஎஸ்

வருகிற செப். 17-ம் தேதி முதல் 21-ம் தேதி மாலை 5 மணி வரை இடஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வருகிற செப். 22-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக் கல்வி,ஆராய்ச்சி இயக்ககம் தகவல் தெரிவித்து உள்ளது.


Tags :
|