எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை இன்று முதல் வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகிறது
By: vaithegi Wed, 28 June 2023 10:04:32 AM
சென்னை: மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு இன்று துவக்கம் .... தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5175 எம்பிபிஎஸ் இடங்கள், 2 பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வானது மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது.வருகிற ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஆரம்பமாகும் நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடு நடைபெற ள்ளது. அதன்படி எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் https://www.tnhealth.tn.gov.in/ https://tnmedicalselection.net/ ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
இதையடுத்து இச்சூழலில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை இன்று காலை 10 மணி முதல் வருகிற ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை வரை நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.