Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு; 420 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு; 420 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

By: Monisha Sat, 05 Dec 2020 3:10:29 PM

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு; 420 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 18-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 420 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு கலந்தாய்வு 18-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக பொதுப்பிரிவு கலந்தாய்வு நடந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க 472 மாணவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அதில் 453 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 148 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்றனர். சுயநிதி கல்லூரிகளில் 217 பேர் எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்றனர்.

medical studies,counselling,college,students,participation ,மருத்துவபடிப்பு,கலந்தாய்வு,கல்லூரி,மாணவர்கள்,பங்கேற்பு

அரசு பல் மருத்துவ கல்லூரியில் 19 பேர் பி.டி.எஸ். இடங்களை தேர்வு செய்தனர். முடிவில் 384 இடங்கள் நிரம்பின. இதுவரையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 75 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. தற்போது அரசு கல்லூரிகளில் 711 எம்.பி.பி.எஸ். இடங்களும், 127 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.

சுயநிதி கல்லூரிகளில் 728 எம்.பி.பி.எஸ். இடங்களும், 985 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நாளை விடுமுறையாகும். மறுநாள் 7-ந் தேதி தொடங்கி, 10-ந் தேதி கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

Tags :