Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்பிபிஎஸ் நிறைவு செய்தவர்கள் பதிவு செய்து கொள்ள அறிவிப்பு

எம்பிபிஎஸ் நிறைவு செய்தவர்கள் பதிவு செய்து கொள்ள அறிவிப்பு

By: Nagaraj Fri, 26 May 2023 8:42:53 PM

எம்பிபிஎஸ் நிறைவு செய்தவர்கள் பதிவு செய்து கொள்ள அறிவிப்பு

புதுடில்லி: பதிவு செய்து கொள்ளலாம்... நிகழாண்டில் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். நிறைவு செய்தவா்கள், தங்களது மாநில மருத்துவ கவுன்சிலில் தொழில் முறை பதிவு செய்து கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் வெளியிட்ட அறிவிப்பு:

notification,colleges,renewal,students,india,mpbs ,அறிவிப்பு, கல்லூரிகள், புதுப்பித்தல், மாணவர்கள், இந்தியா, எம்.பி.பி.எஸ்.,

2022-23-ஆம் கல்வியாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்த மாணவா்கள் அனைவரும் தங்களது மாநில மருத்துவ கவுன்சிலின் மூலம் தொழில்முறை பதிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோன்று உள்ளுறை பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரப் புதுப்பித்தல் நடவடிக்கைகளால் இதற்கு இடா் ஏற்படாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|