Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்.சி.ஏ. முதுகலை படிப்பு 2 ஆண்டுகளாக குறைப்பு; அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவிப்பு

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு 2 ஆண்டுகளாக குறைப்பு; அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவிப்பு

By: Monisha Mon, 06 July 2020 09:41:39 AM

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு 2 ஆண்டுகளாக குறைப்பு; அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவிப்பு

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு (PG) தற்போது மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் எம்.சி.ஏ. முதுகலை படிப்பை 2 ஆண்டுகளாக குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2020-2021-ம் கல்வி ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி குழுவின் ஒப்புதலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.ஏ. படிக்க பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்க வேண்டும். பி.காம், பி.எஸ்.சி., பி.ஏ., படித்தவர்கள் 12-ம் வகுப்பில் கட்டாயம் கணிதம் பாட எடுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டமும் இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags :