Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்திற்கு வந்து சேராத கோமாரி நோய் தடுப்பூசி: பரவும் அபாயம் என தகவல்

தமிழகத்திற்கு வந்து சேராத கோமாரி நோய் தடுப்பூசி: பரவும் அபாயம் என தகவல்

By: Nagaraj Sun, 08 Oct 2023 9:04:04 PM

தமிழகத்திற்கு வந்து சேராத கோமாரி நோய் தடுப்பூசி: பரவும் அபாயம் என தகவல்

சென்னை: தடுப்பூசி வரவில்லை... கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க செப்டம்பர் மாதம் போட வேண்டிய தடுப்பூசிகளை மத்திய அரசு இன்னும் தமிழகத்திற்கு அனுப்பாததால் இதுவரை போடவில்லை என்பதால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பருவமழை, வெயில் காலங்களில் மாடுகள், கன்றுகளை கானை நோய் என்னும் கோமாரி நோய் கடந்த காலத்தில் அதிகளவு தாக்கியது. இந்நோயைக் கவனிக்காமல், சிகிச்சை அளிக்காமல் விட்டால் மாடுகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்நோயால் மாடுகள் உயிரிழப்பு குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, மாடுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது போன்ற பாதிப்புகளால் கால்நடைகளை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

அதனால், ஆண்டுதோறும் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தில் மாடுகளுக்கும், 4 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 76 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசிப் போடப்படும்.

vaccination,state government,central government,tamil nadu,measles,not sent ,தடுப்பூசி, மாநில அரசு, மத்திய அரசு, தமிழகம், கோமாரி நோய், அனுப்பவில்லை

தற்போது அக்டோபர் கடைசியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் செப்டம்பர் மாதத்திலேயே தடுப்பூசிகள் போடப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போட வேண்டிய தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பு மருந்து மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என்பதால், மாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.

இதுகுறித்து கால்நடை துறையினர் கூறுகையில், ‘‘ கடந்த 10 ஆண்டாக இந்த நோயைத் தடுக்க மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த தடுப்பூசியை மாநில அரசு மாடுகளுக்கு போட்டு வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் மத்திய அரசு தமிழகத்திற்கான தடுப்பூசிகளை வழங்கி வந்தது. செப்டம்பர் மாதம் போடுவதற்கான தடுப்பூசி தற்போது வரை எந்த மாவட்டத்திற்கும் அனுப்பவில்லை, ’’ என்றனர்.

Tags :