Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியை ஒட்டி அதிகாலை முதல் இறைச்சி விற்பனை படு மும்முரம்

தீபாவளியை ஒட்டி அதிகாலை முதல் இறைச்சி விற்பனை படு மும்முரம்

By: Nagaraj Sat, 14 Nov 2020 1:13:50 PM

தீபாவளியை ஒட்டி அதிகாலை முதல் இறைச்சி விற்பனை படு மும்முரம்

அதிகாலை முதல் இறைச்சி விற்பனை விறுவிறுப்பு... கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கோழி, ஆடு இறைச்சிகள் வழக்கமான விலையிலே விற்பனை செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கோவையில் உள்ள இறைச்சிக் கடைகளில் வழக்கம்போல விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இரவு முழுவதும் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பது வழக்கம்.

ஆனால் கொரொனா தொற்று காரணமாக இரவு நேரத்தில் இறைச்சி கடைகள் திறக்கப்பட வில்லை. அதிகாலையிலேயே இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. காலை 5 மணி முதல் இறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சி மற்றும் கோழி விற்பனையானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

meat sale,coimbatore,breakfast,early morning,price ,இறைச்சி விற்பனை, கோவை, விறுவிறுப்பு, அதிகாலை, விலை

தனிமனித இடைவெளியை பின்பற்றி இறைச்சி விற்பனை நடப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இறைச்சி விற்பனை குறைவுதான் எனவும் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் இறைச்சி வழக்கமாக விற்கப்படும் அதே விலையிலேயே விற்கப்படுகிறது. நாட்டுக்கோழி கிலோ 580 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி கிலோ 220 ரூபாய்க்கும், ஆட்டிறைச்சி கிலோ 760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Tags :