Advertisement

தமிழகம் முழுவதும் இன்று 2000 இடங்களில் மருத்துவ முகாம்

By: vaithegi Sat, 02 Dec 2023 11:02:16 AM

தமிழகம் முழுவதும் இன்று 2000 இடங்களில் மருத்துவ முகாம்


சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் பலர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக மழைகாலங்களில் பரவக்கூடிய, மலேரியா, டெங்கு, டைபாயிடு போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில், அனைத்து மாவட்டங்களிலும், தூய்மை பணியாளர்கள் கொசுவை ஒலிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, ஒவ்வொரு வீடுகளிலும் கொசு உருவாகாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். எனவே அதன்படி, சென்னை மாநகராட்சியில் 100 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

medical camp,tamil nadu ,மருத்துவ முகாம்,தமிழகம்

அதேபோன்று இன்று விரிவான மருத்துவ காப்பீடு முகாமும் நடைபெற உள்ளது. அதன்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் 100 இடங்களில் இன்று நடைபெற உள்ளது. விரிவான மருத்துவ காப்பீட்டு முகாம் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

சென்னையில் ராயபுரம், அடையார், மயிலாப்பூர், அயனாவரம், நீலாங்கரை உள்ளிட்டு 5 இடங்களில் இந்த காப்பீடு முகாம் நடைபெறுகிறது. புதிதாக திருமணமானவர்கள், விடுபட்டவர்கள் இத் திட்டத்தில் இணையலாம்.

Tags :