Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்னாப்பிரிக்காவில் அதிகரிக்கும் கொரோனாவால் வைத்திய சாலைகள் நிரம்பும் நிலை

தென்னாப்பிரிக்காவில் அதிகரிக்கும் கொரோனாவால் வைத்திய சாலைகள் நிரம்பும் நிலை

By: Nagaraj Wed, 15 July 2020 11:04:00 PM

தென்னாப்பிரிக்காவில் அதிகரிக்கும் கொரோனாவால் வைத்திய சாலைகள் நிரம்பும் நிலை

ஒரு மாதத்திற்குள் அரச வைத்தியசாலைகள் நிரம்பி விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் ஒரு மாதத்திற்குள் அரச வைத்தியசாலைகள் நிரம்பலாம் என்று அரசாங்கம் தரப்பில் அச்சம் வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகப்படியான பாதிப்பை தென்னாபிரிக்காவில் சந்தித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி தென்னாபிரிக்காவில் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 292 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

south africa,corona,government hospital,government ,தென்னாபிரிக்கா, கொரோனா, அரச வைத்தியசாலை, அரசாங்கம்

அதில் மூன்றில் 2 பங்கு வெஸ்டர்ன் கேப் மாகாணத்தின் கேப்டவுன் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் வேகமாகப் பரவி வருவதால் ஒரு மாதத்திற்குள் அனைத்து அரச வைத்தியசாலைகளும் நிரம்பலாம் என அரசாங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|