Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் அரசாணை

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் அரசாணை

By: Nagaraj Fri, 30 Oct 2020 12:50:58 PM

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் அரசாணை

சென்னை: அரசாணை பிறப்பிப்பு... மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தாா்.

சமூக நீதி காக்கவும், அரசுப் பள்ளி மாணவா்களின் நலன் கருதியும், நீட் தோ்ச்சி பெற்ற ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் வகையில் அவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளாா்.

medical dream,students,tamil nadu government,arrangement,reservation ,மருத்துவக்கனவு, மாணவர்கள், தமிழக அரசு, ஏற்பாடு, இடஒதுக்கீடு

ஸ்டாலின் வரவேற்பு: நீட் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் தாமதிக்காமல் இந்த இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவிக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): இந்த அரசாணை மாணவா்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தை போக்க வேண்டுமே தவிர, மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவிடக் கூடாது. ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தான் சரியாக இருக்கும். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைப் பாதுகாக்க போதிய சட்டப்பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவு நனவாகும் என எதிா்பாா்ப்போம்.

Tags :