Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கை கழுவுவதற்கு சிறந்த சானிடைசர்களை தேர்வு செய்வது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

கை கழுவுவதற்கு சிறந்த சானிடைசர்களை தேர்வு செய்வது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

By: Karunakaran Wed, 09 Sept 2020 10:29:46 AM

கை கழுவுவதற்கு சிறந்த சானிடைசர்களை தேர்வு செய்வது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது. இதற்காக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை பின்பற்ற அரசுகளும், மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளனர். இதில் கை கழுவ சானிடைசர் பயன்படுத்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த சானிடைசர்கள் சில நேரம் தோலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

எந்த வகையான சானிடைசர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நிபுணர்கள் விளக்கமளிக்கையில், அதன்படி, சானிடைசர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத எத்தில் ஆல்கஹால் அல்லது 70 சதவீத ஐசோபுரொப்பைல் ஆல்கஹால் கொண்டதாக இருக்க வேண்டும். வடிகட்டிய தண்ணீர், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் கிளிசரின் போன்ற அங்கீரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

medical experts,best sanitizers,hand washing,corona virus ,மருத்துவ நிபுணர்கள், சிறந்த சுத்திகரிப்பாளர்கள், கை கழுவுதல், கொரோனா வைரஸ்

மெத்தனால் அல்லது 1-புரொப்பனால் அடங்கிய சானிடைசர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை என எச்சரித்து உள்ளனர். உணவு அல்லது குடிக்கும் பானம் இருக்கும் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு உள்ள சானிடைசர்களை, குழந்தைகள் தற்செயலாக குடிக்கக்கூடும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். ஆல்கஹாலுக்கு பதிலாக பென்சல்கோனியம் குளோரைடு கலந்த சானிடைசர்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொல்லும் திறன் குறைவு என்பதால் அவற்றை வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சொந்தமாக வீடுகளில் சானிடைசர்கள் தயாரிக்கக்கூடாது. வேதிப்பொருட்களின் தவறான சேர்க்கையால் தோலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். கை கழுவுவதற்கு சோப் மற்றும் தண்ணீர் இல்லாதபோது மட்டுமே சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும். கிருமிகளை அகற்றுவதற்கு கை கழுவுதல் சிறந்தது என கொலம்பியா பல்கலைக்கழக நோய்த்தொற்று ஆய்வாளர் பரன் மதேமா தெரிவித்துள்ளார்.

Tags :