Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு ஆலோசனை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு ஆலோசனை

By: Monisha Sat, 30 May 2020 4:52:18 PM

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு ஆலோசனை

தமிழகத்தில் மொத்தம் 20,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், 4-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவத்தையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவின் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில் அதிகமாக இருக்கிறது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.

tamil nadu,coronavirus,curfew,medical group of experts ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,மருத்துவ நிபுணர்கள் குழு

ஒட்டு மொத்த இந்தியாவில் 70 சதவீத பாதிப்பு 30 மாவட்டங்களில் மட்டுமே இருக்கிறது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் முக கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஊரடங்கை நீட்டிப்பது நல்லது. தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை. சென்னையில் பொது போக்குவரத்துக்கு பஸ், ரெயிலை இயக்கக் கூடாது. வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கூடாது. சென்னையில் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை கொரோனாவில் இருந்து வயதானவர்களை குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
|