Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா .. எச்சரிக்கும் மருத்துவ குழு

சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா .. எச்சரிக்கும் மருத்துவ குழு

By: vaithegi Wed, 31 May 2023 3:05:16 PM

சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா .. எச்சரிக்கும் மருத்துவ குழு

சீனா: 2020 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் பரவ தொடங்கிய கொரோனா என்னும் பெருந்தொற்று மிகவும் பெரிய அதிர்வலைகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் மக்கள் இதற்கு முன்னர் அனுபவித்திராத துன்பத்தை ஏற்படுத்தியது.

மிகவும் தீவிரமான ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக தான் கடந்த சில மாதங்களாக உலகம் இயல்பு நிலையில் இயங்கி கொண்டு வருகிறது.

ஆனால் கொரோனா தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் மட்டும் தொடர்ந்து கொரோனாவின் ருத்ரதாண்டவம் இன்னும் கட்டுக்குள் வர வில்லை.

medical group,corona,china ,மருத்துவ குழு,கொரோனா ,சீனா

தற்போது அங்கு, கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வரும் நிலையில், வரும் ஜூன் மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொடும் எனவும், மேலும், ஒரே வாரத்தில் மட்டும் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படும் எனவும், மருத்துவர்கள் குழு எச்சரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக, இதுவரை இருந்த பாதிப்புகளை காட்டிலும் பாதிப்பு மிகவும் பெரிய அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|