Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயர்லாந்தில் ட்ரோன்கள் வாயிலாக மருந்து, உணவுப் பொருட்களை சப்ளை

அயர்லாந்தில் ட்ரோன்கள் வாயிலாக மருந்து, உணவுப் பொருட்களை சப்ளை

By: Nagaraj Tue, 19 May 2020 11:03:59 PM

அயர்லாந்தில் ட்ரோன்கள் வாயிலாக மருந்து, உணவுப் பொருட்களை சப்ளை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அயர்லாந்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வயதானவர்கள் மருந்து பொருட்கள் வாங்க இயலாமல் தவித்து வருகின்றனர். இதற்காக அயர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ட்ரோன்கள் வாயிலாக மருந்துகள், உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று வீடுவீடாக வழங்கும் சேவையை தொடங்கி உள்ளது.

மன்னா ஏரோ என்கிற நிறுவனம் அந்நாட்டின் மணிகால் நகரில் வயதானவர்களுக்காக உணவு வகைகள், மருந்து வகைகளை ட்ரோன்கள் மூலம் வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கும் பணியை துவங்கி உள்ளது.

service,drones,drugs,food products,ireland ,சேவை, ட்ரோன்கள், மருந்து, உணவுப் பொருட்கள், அயர்லாந்து

இந்த ஆண்டு இறுதிக்குள் 600 நகரங்களில் இந்த சேவை துவங்கப்பட உள்ளதாகவும். ஒரு விமானம் ஒரு நாளில் 100 முறை 4 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் சென்று வழங்க முடியும் என்று அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வயதானவர்களை அதிகளவில் பாதிக்கிறது என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களால் தங்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவுப் பொருட்களை வாங்க இயலாத நிலை உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்கவே இப்படி ஒரு சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|