Advertisement

நடுத்தர தொலைவு அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி

By: Nagaraj Fri, 02 June 2023 11:11:33 AM

நடுத்தர தொலைவு அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: ஏவுகணை சோதனை வெற்றி... நடுத்தர தொலைவு அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒடிசாவின் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், எஸ்.எப்.சி.(SFC) ரக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி-1 அணு ஆயுத ஏவுகணை, மிக உயர்ந்த நிலையில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

victory,test,agni-5,ballistic missile,technology ,வெற்றிகரம், சோதனை, அக்னி-5, பாலிஸ்டிக் ஏவுகணை, தொழில்நுட்பம்

ஏவுகணையின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்தன என்றும் குறிப்பிட்டுள்ளது.

அணு ஆயுதங்களைத் தாங்கி 5,000 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லும் திறன் கொண்ட அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையை, இந்தியா கடந்த டிசம்பர் மாதம் வெற்றிகரமாக சோதனை செய்தது.

Tags :
|
|