Advertisement

நாகர்கோவில் வருகிற செப்.9 மெகா வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 22 Aug 2023 11:46:57 AM

நாகர்கோவில் வருகிற செப்.9 மெகா வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவில் : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கான மெகா வேலைவாய்ப்பு முகாம் ... தமிழக அரசு முன்னாள் முதல்வர் டாக்டர் மு.கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடப்பாண்டு முழுவதும் பல்வேறு வகையான சிறப்புத் திட்டங்களை மக்களுக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாவட்ட வாரியாக மெகா வேலை வாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி கொண்டு வருகிறது.

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 9-ம் தேதி அன்று கன்னியாகுமரி நாகர்கோயில் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பலனளிக்கும் வகையில் வெட்டூர்ணிமடம், எம் எஸ் ரோடு, முன்னோடி குமாரசாமி கல்லூரியில் தனியார் துறைகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது.

employment camp,nagercoil , வேலைவாய்ப்பு முகாம் ,நாகர்கோவில்

இதையடுத்து இதில் 8-ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை பல்வேறு தகுதிகளையும் கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் ஆவணங்களுடன் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பலனடையலாம் என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் பல்வேறு தனியார் துறை நிறுவனங்களை சேர்ந்தவர்களும் தங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் பற்றிய அதிக தகவல்களை https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/52308210011 என்ற இணைய முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :