Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது- உச்சநீதிமன்றம் அதிரடி..

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது- உச்சநீதிமன்றம் அதிரடி..

By: Monisha Wed, 20 July 2022 9:33:20 PM

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது- உச்சநீதிமன்றம் அதிரடி..

டெல்லி:காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் மீண்டும் ஜூலை 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6-ந்தேதியும் கூட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் பங்கீடு முறையாக மேற்கொள்ளவில்லை என கர்நாடகா மீது தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு முறையாக நீர் பங்கீடு அளிக்கப்படுவதாக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் நடத்தப்பட்டது.

dam,water,high court,action ,மேகதாது ,அணை,உச்சநீதிமன்றம், கூட்டம் ,

இதுபோல், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் பங்கீடு முறையாக மேற்கொள்ளவில்லை என கர்நாடகா மீது தமிழக அரசு புகாரளித்துள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அறிய விரும்புகிறோம் என்றும், மேகதாது அணை பற்றி விவாதிக்கலாமா? கூடாதா என்பது பற்றி காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும், 2018-ம் ஆண்டு முதல் மேகதாது பிரச்சனை இருக்கிறது, அதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒருவாரம் ஒத்திவைத்தால் ஒன்றும் ஆகாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags :
|
|