Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலவச பரிசுப் பொருட்களை திருப்பி அனுப்பி அதிரடி காட்டிய மேகாலய மாநில பெண்

இலவச பரிசுப் பொருட்களை திருப்பி அனுப்பி அதிரடி காட்டிய மேகாலய மாநில பெண்

By: Nagaraj Sun, 05 Feb 2023 9:59:47 PM

இலவச பரிசுப் பொருட்களை திருப்பி அனுப்பி அதிரடி காட்டிய மேகாலய மாநில பெண்

மேகாலயா: மேகாலய மாநிலத்தில் கிழக்கு காஸி ஹில்ஸ் மாவட்டத்தில் குடும்பப் பெண்மணி ஒருவர் தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் சார்பில் வழங்கப்பட்ட இலவசப் பரிசுப் பொருள்களை வேண்டாம் என்று திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

தேர்தல் வந்தாலே மக்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆளுங்கட்சி சார்பில் ஏதாவது பணம், பரிசுப் பொருள்கள் வராதா அல்லது எதிர்க்கட்சியினர் வாக்குகளைக் கவர ஏதாவது பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுக்க மாட்டார்களா என்று காத்திருப்பவர்கள் உண்டு.

ஆனால், மேகாலய மாநிலத்தில் கிழக்கு காஸி ஹில்ஸ் மாவட்டத்தில் குடும்பப் பெண்மணி ஒருவர் தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் சார்பில் வழங்கப்பட்ட இலவசப் பரிசுப் பொருள்களை வேண்டாம் என்று கூறித் திருப்பி அனுப்பி அசத்தியுள்ளார்.

மேகாலய மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 2 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

free,meghalaya,gifts,election,sent back ,இலவசம், மேகாலயா, பரிசுப்பொருட்கள், தேர்தல், திருப்பி அனுப்பினார்

பியூரிடி பாவா என்ற பெண், உள்ளூர் மகளிர் அமைப்பின் தலைவராக இருக்கிறார். மேற்கு ஷில்லாங் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட லூமிடிங்கிரி என்னுமிடத்தில் இவர் வசித்து வருகிறார்.

இவரது தொகுதியில் தேசிய மக்கள் கட்சிச் சார்பில் மொஹிந்தரோ ராப்ஸாங் என்பவரும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி சார்பில் பால் லிங்டோவும் போட்டியிடுகின்றனர். இரு கட்சியினரும் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 28 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்சிகளின் ஏஜெண்டுகளும் இவரது வீட்டுக்கு வந்து தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு பரிசுப் பொருள்களையும் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். அந்தச் சமயத்தில் பியூரிடி பாவா வீட்டில் இல்லை. மகள் மட்டுமே இருந்துள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்தபோது அரசியல் கட்சியினர் வந்து வாக்கு கேட்டு, குக்கர் மற்றும் சமையல் பாத்திரங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றதாக மகள் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இரண்டு அரசியல்கட்சிகளின் ஏஜெண்டுகளையும் தொடர்புகொண்டு பேசினார். பரிசுப் பொருள்கள் அனுப்பியது அவர்கள்தான் என்பதை உறுதி செய்துகொண்டார். பின்னர் அந்தப் பரிசுப் பொருள்களைத் திருப்பியனுப்பினார். இதில் ஒரு வேட்பாளர் புத்தாண்டு காலண்டரை அனுப்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags :
|
|