Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெர்லினில் உறை பனி ஏரியில் உற்சாகமாக குளித்த ஆண்கள், பெண்கள்

பெர்லினில் உறை பனி ஏரியில் உற்சாகமாக குளித்த ஆண்கள், பெண்கள்

By: Nagaraj Mon, 26 Dec 2022 4:33:44 PM

பெர்லினில் உறை பனி ஏரியில் உற்சாகமாக குளித்த ஆண்கள், பெண்கள்

பெர்லின்: உறை பனி ஏரியில் குளித்த பெண்கள்... ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உறைபனி போர்த்திய ஏரியில் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக குளித்தனர்.

அவ்வாறு குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என்று சீல்ஸ் குழுவினர் நம்புகின்றனர். 1980-ல் கிழக்கு ஜெர்மனியின் தலைநகராக இருந்த பெர்லினில், சீல்ஸ் கிளப் நிறுவப்பட்டது.

christmas. ceremony,berlin seals,crew,lake,frost ,கிறிஸ்துமஸ். விழா, பெர்லின் சீல்ஸ், குழுவினர், ஏரி, உறைபனி

இதில், 12 முதல் 90 வயது வரையிலான 157 உறுப்பினர்கள் உள்ளனர். 40 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த பாரம்பரிய நிகழ்வில், பெர்லின் சீல்ஸ் குழுவினர் 20-க்கும் மேற்பட்டோர் 2 டிகிரி குளிர் ஏரியில் குளித்து மகிழ்ந்தனர்.

தற்போது பெரும் பனிப்பொழிவு இருப்பதால் நீர் நிலைகள் அனைத்தும் உறைந்து போய் காணப்படுகிறது. இருப்பினும் இது பாரம்பரிய நிகழ்வு என்பதால் ஆண்களும், பெண்களும் உற்சாகமா குளித்தனர்.

Tags :
|
|