Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்தில் அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் அதீத வெப்பம் நிலவும் .. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இங்கிலாந்தில் அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் அதீத வெப்பம் நிலவும் .. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By: vaithegi Thu, 11 Aug 2022 5:18:06 PM

இங்கிலாந்தில் அடுத்த 4 நாட்களுக்கு  அநேக இடங்களில் அதீத வெப்பம் நிலவும்  .. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

லண்டன்: குளிர்பிரதேச பகுதிகளான ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் சமீப காலங்களில் மிக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது.இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை கடந்த ஜூலை மாதம் கடும் வெப்ப அலைகளை சந்தித்த இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு இங்கிலாந்தின் அநேக இடங்களில் அதீத வெப்பம் நிலவும், புதிய வெப்ப அலைகள் உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

எனவே இதன்காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் அதிகமாக உயரலாம் என தெரிவித்துள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கம் இங்கிலாந்தை சுற்றியுள்ள அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளிலும் இருக்கும்.

met office,new heat waves ,வானிலை ஆய்வு மையம்,புதிய வெப்ப அலைகள்

1935ம் ஆண்டுக்கு பின்னர், கடந்த ஜூலை மாதம் தான் இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஜூலையாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின், இப்போது தான் இவ்வளவு தீவிரமாக, ஓய்வில்லாமல் பணியாற்றியதாக அந்நாட்டு தீயணைப்பு துறை வட்டாரங்கள் சர்ப்பில் தெரிவிக்கின்றன. மேலும், தண்ணீர் வழங்கி வரும் நிறுவனங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags :