Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லாமா -2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கிய மெட்டா

லாமா -2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கிய மெட்டா

By: Nagaraj Wed, 19 July 2023 5:02:58 PM

லாமா -2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கிய மெட்டா

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு அமைப்பு... பேஸ்புக்- இன் தாய் நிறுவனமான மெட்டா, ChatGPT-க்கு போட்டியாக லாமா-2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தும் வகையில் மைக்ரோசாப்ட் உடன் கூட்டு சேர்ந்து லாமா-2 உருவாக்கப்பட்டு உள்ளதாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

zuckerberg,record,research,generation,microsoft official ,ஜூக்கர்பெர்க், பதிவு, ஆராய்ச்சி, தலைமுறை, மைக்ரோசாப் அதிகாரி

இதனை குறிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இருவரும் ஒரே மாதிரியான நீல நிற உடையணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஜூக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.

லாமா-2 அடுத்த தலைமுறைக்கான ஆராய்ச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு உதவும் எனவும், இதைச் செய்த சத்யா மற்றும் தங்கள் அணிக்கு நன்றி எனவும் ஜுக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.

Tags :
|