Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொளுத்தும் வெயில் ...வானிலை மையம் எச்சரிக்கை

தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொளுத்தும் வெயில் ...வானிலை மையம் எச்சரிக்கை

By: vaithegi Thu, 03 Aug 2023 11:36:29 AM

தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொளுத்தும் வெயில் ...வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாத துவக்கத்திலிருந்தே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தொடர்ந்து கனமழை இருந்து வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது மழையின் அளவு குறைந்து வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.

ஆனாலும், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகத்தில் அதிகபட்சமாக 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தி கொண்டு இருக்கிறது.

heavy rain,meteorological center ,வானிலை மையம்,கனமழை

இந்த நிலையில் கூடுதல் வெப்பச் சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைப்பொழிவு இருக்கலாம் என வானிலை மையம் அறிவித்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில், தமிழகத்தில் தற்போது காற்றின் அளவும் அதிகரித்துள்ள நிலையில் மீனவர்களுக்கான எச்சரிக்கையையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

அதாவது, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் நாளை வரை மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Tags :