Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வானிலை ஆய்வு மையம் தகவல்... மழை பெய்யும் வாய்ப்பு இருக்காம்

வானிலை ஆய்வு மையம் தகவல்... மழை பெய்யும் வாய்ப்பு இருக்காம்

By: Nagaraj Tue, 22 Nov 2022 7:30:51 PM

வானிலை ஆய்வு மையம் தகவல்... மழை பெய்யும் வாய்ப்பு இருக்காம்

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆனாலும் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு 3-வது மழைப்பொழிவில் பெய்யவில்லை. இதனை அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வு பகுதியாக இன்று வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் 8.30 மணி அளவில் காரைக்கால் பகுதியில் இருந்து கிழக்கு -வடகிழக்கு சுமார் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு -தென்கிழக்கில் சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.

heavy rain,thiruvallur,kanchipuram ,கனமழை, திருவள்ளூர், காஞ்சிபுரம்

மேலும் மேற்கு -வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழக, புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து விடும். இதனால் வட தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி , மின்னலுடன் மழை பெய்யும் .

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும் அறிவித்திருக்கிறது.

Tags :