Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை .. மீனவர்கள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தகவல்

கனமழை .. மீனவர்கள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Sat, 06 Aug 2022 6:47:18 PM

கனமழை ..   மீனவர்கள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது. அதன்படி இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றின் வேறுபாடு காரணமாக நாளை (ஆகஸ்ட் 6) முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை அடுத்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

bureau of meteorology,pisces ,வானிலை ஆய்வு மையம் ,மீனவர்கள்

மேலும் நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இருக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :