Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை

By: vaithegi Thu, 21 July 2022 9:10:10 PM

7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை

இந்தியா: இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. அதிலும், கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வழக்கத்திற்கும் மாறாக அதி கனமழை பெய்து கொண்டு வருகிறது. மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவை ஏற்பட்டு வருகின்றன.

மேலும், கூடுதல் மழைபொழிவின் காரணமாக தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்ததுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மிக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

red alert,warning,weather research center ,ரெட் அலர்ட் ,எச்சரிக்கை,வானிலை ஆய்வு மையம்

மஹேஸ்வர், கலீடர் போன்ற பகுதிகளில் மிக அதிக அளவில் மழைநீர் தேங்கி கிடப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சம்பவத், நைனிடால், உதம் சிங் நகர், டேராடூன், தெஹ்ரி கர்வால், பவுரி கர்வால் மற்றும் ஹரித்வார் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை தவிர மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான, லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை அடுத்து, பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags :